சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டணத்திற்கு உரியது என தெரிவித்தார். நீட் தேர்வு நமக்கு தேவையில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது இந்த தேர்வை ஒன்றிய அரசு மட்டுமே தடுக்க முடியும் எனவும் கூறினார்.
கடந்த கால திமுக ஆட்சியில் நீட் தேர்வை ஒழிக்க ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அது போல ஒரு பொய்யான கருத்தை நாங்கள் சொல்ல முடியாது. மக்களை பொய்யான நம்பிக்கையை கொடுக்க முடியாது எனவும் நீட் தேர்வை மத்திய அரசு நீதிமன்றம் தீர்ப்பு மூலம் கொண்டு வந்தது. எனவே முறையாக தான் இதற்கு முடிவு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என கூறுவது பொய் எனவும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் குளறுபடி தான் நடக்கிறது எனவே இந்த குளறுபடியான தேர்வில் தரமற்றவர்கள் மருத்துவராக வர வாய்ப்புள்ளது. நீட் தேர்வை நடந்த முடியாத சூழலில் தான் நிர்வாகம் உள்ளது. அந்த தேர்வே தேவையில்லை என்பது தான் எங்கள் நிலைப்பாடு என கூறினார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, ஏற்கனவே கட்சியின் சார்பாக நாங்கள் எங்கள் கண்டனங்களையும் நிலைப்பாட்யைும் தெரிவித்துவிட்டோம் என தெரிவித்தார். மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் உடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தான கேள்விக்கு, மேகதாது விவகாரம் தொடர்பாக அது சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் முதல்வர் தலைமையில் முதல் கட்ட ஆலோசனை மேற்கொண்டோம். வரக்கூடிய நாட்களில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
மேகதாது விவகாரத்தில் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என நாங்கள் அறிவிக்க உள்ளோம் என கூறினார். நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளாத்திகுளம் எம்எல்ஏ கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு,
விளாத்திகுளம் எம்எல்ஏ பேசியதை அனைவரும் பார்த்தோம், முதலமைச்சரின் கையை உடைப்பேன் என பேசி இருக்கிறார். அவர் பேசியதிற்கு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த கால திமுக ஆட்சியில் அவர்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது குண்டாஸ் போட்டு உள்ளனர். 70 வயது பாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்தது கடந்த கால திமுக ஆட்சியில் தான் என கூறினார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் முதலமைச்சர் மீது அவதூறாக பேசுவதும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கும் இப்படி பேசுவது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் எனவும் அப்போது தவெக கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தால் அங்கே கை கலப்பு பிரச்சினையாகி இருக்கும் என கூறினார்.
சட்டப்படி அவர் பேச்சுக்கு புகார் கொடுக்கப்பட்டு காவலர்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவித்தார். பொதுவெளியில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசினால் அது சட்ட விரோத செயல் என கூறினார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் உயிருக்கு அச்சுறுத்தல் என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு,
அவர் கைது சாதாரண நடவடிக்கை தான் இதில் என்ன உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இவர்கள் எப்படி டிராமா பண்றாங்கள் என்றால், கரூர் காரர் கட்டில் கீழே சென்று அழுதார். இன்று காரில் ஏறி மயக்கம் வருகிறது என ஒருவர் அழுகிறார். இப்படியே டிராமா செய்து கொண்டு இருந்தால் காவலர்கள் அவர்களது பணிகளை செய்ய வேண்டாமா என கூறினார். ஒரு புகார் வருகிறது அதில் காவலர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதற்கு இவ்வளவு டிராமா செய்கிறார்கள் எனவும் சட்டமன்ற உறுப்பினரரை கைது செய்யும் போது காவலர்களுக்கு என்ன நடைமுறை என தெரியும் எனவும் காவலர்கள் அவர்கள் அதிகாரத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து உள்ளனர் என தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து இன்று நிறைய பேர் விலகி உள்ளனர். அவர்கள் தவெகவிற்கு வருவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கட்சி தலைமை மீது அதிருப்தியால் வெளியேறி உள்ளனர். அதற்கும் குதிரை பேரம் என்றால் என்ன அர்த்தம் குதிரை பேரம் என்பது எங்கள் எம்எல்ஏக்கள் இடம் தொகை கொடுத்து பேசினார்கள் அது தான் குதிரை பேரம் என கூறினார். மின் கட்டணம் குறித்து தலைமை பொறியாளர் இடம் வந்த சுற்றிக்கை குறித்தான கேள்விக்கு, நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த மின் கட்டணம் குறித்து தலைமை பொறியாளர் சுற்றிக்கை பொதுவாக வந்த சுற்றிக்கை தான் எனவும் மக்களுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்பது தான் ஆனால் சமூக வலைதள பக்கத்தில் ஒரு சில கருத்துகளை பரப்பி வந்தனர். அதனால் அனைவரும் சென்று சரியான சோதனை மேற்கொள்ள வேண்டும் என ஒரு பொதுவான சுற்றிக்கை அனுப்பட்டது. அதை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
தாம்பரத்தில் மின் பங்கீடு அதிகம் வருவதாக கூறி உள்ளனர். அங்கு மீண்டும் கணக்கீடு செய்ய கூறி உள்ளேன். ஒரு சில இடங்களில் மின் கணக்கீடு எடுத்தவர்கள் தவறு செய்து உள்ளார்களா என பார்த்து வருகிறோம். ஏன் என்றால் மின் கணக்கீடு எடுப்பவர்களில் 5,500 இருக்க வேண்டிய இடத்தில் 800 பேர் தான் உள்ளனர். ஒரு வேலை அவர்கள் தவறுதலாக மின் கணக்கீடு எடுத்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டுளேன். அது தொடர்பாக நாளை மின் வாரிய அதிகாரிகள் உடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மின் கட்டணத்தில் தவறுதலாக அதிக தொகை காட்டி அதற்கு பணம் செலுத்தி இருந்தால், இன்று அனைத்துமே Digital செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த தொகை deposit தொகையாகவே இருக்கும் என தெரிவித்தார்.
மூன்று நான்கு நாட்களாக தான் மின் கட்டணம் குளறுப்படி நடந்துள்ளதாக தகவல் வருகிறது. அது வேண்டும் என்றே பரப்பபடுகிறாதா என தெரியவில்லை எனவே ஒரு சில இடங்கள் குறிப்பாக 7 இடங்களில் மட்டும் தான் மறு மின் கணக்கீடு எடுக்க சொல்லி உள்ளோம் என தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் 10 நாட்களில் அனைத்து வல்லுனர்கள் இடம் ஆலாசித்து முதலமைச்சர் விஜய் அடுத்த கட்ட முடிவுகளை அறிவிக்க உள்ளார் என தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.