சென்னை: சென்னை சின்ன எர்ணாவூர் பகுதியில் உள்ள விம்கோ நகர் ரயில் நிலையத்தின் மேற்கூறையின் அடித்தளம் மூன்றாவது முறையாக பேயர்ந்து விழுந்ததில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்ற பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.

இதனை அடுத்து சின்ன எர்ணாவூர் ஊர் தலைவர் கோவிந்தசாமி முன்னாள் செயலாளர் நவீன் குமார், முன்னாள் தலைவர் சார்லஸ், வழக்கறிஞர் நிவாஸ் ஆகியோர் அப்பகுதிக்கு இளைஞர்களுடன் வந்து மெட்ரோ நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 இந்நிலையில் மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்பு மெட்ரோ நிர்வாக அதிகாரி வினோத் என்பவர் வந்தார். அப்போது பொதுமக்கள் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. மூன்றாவது முறையாக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நூல் இலையில் ஒரு பெண்மணி தப்பி உள்ளார். மேலும் எங்கள் உட்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அச்சமாக உள்ளது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் எண்ணூர் போலீசாரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பொதுமக்களை கலைந்து செல்லும்படி தெரிவித்தனர். இதில் ஆவேசமடைந்த பொதுமக்கள் இங்கு நடந்த விஷயத்தை அறியாமல் கலைந்து செல்ல சொல்லி இருக்கிறீர்களா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் மேற்கூரை பெயர்ந்து விழுந்த இடத்தில் பேரிகார்டு மேலும் எந்தவித பாதுகாப்பும் அமைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மூன்றாவது முறையாக இடிந்து விழுந்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”