சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 பிறந்த தினத்தை முன்னிட்டு 520 பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆங்காங்கே பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மணலி அண்ணா சிலை அருகே சுமார் 520 பொது மக்களுக்கு தையல் மிஷின்கள் கிரைண்டர்கள் மிக்ஸிகள், 5 கிலோ அரிசி மூட்டைகள், புடவைகள் குடம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சாரதி பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மாவட்ட இணை செயலாளர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் மாரி, செயல்வீரர்கள் சூரிய பிரகாஷ், சரவணன், லோகேஷ்,முரளி, நாகராஜ் சிவக்குமார், ரகுராம்,கேபிள் ராணி, லக்ஷ்மி , மதிவாணன், ராஜவேல், கணேஷ், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.