தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி சுக்குநூறாக உடைந்துள்ளது. எங்கள் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். தொழில்துறை அமைச்சர், அதிகாரிகள் உடன் செல்லாதது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல். முருகன் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழக மக்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்த அவர், இந்த நன்னாளில் அனைவரும் அனைத்து வளங்களையும் பெற்று, உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என விநாயகரிடம் வேண்டிக் கொண்டதாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைய அனைவரின் முயற்சியுடன் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் எல். முருகன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ராமகோபாலன் அவர்களால் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 40 ஆண்டுகளாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்ததே இல்லை என விமர்சித்த மத்திய அமைச்சர் எல். முருகன், அதற்காகத்தான் தமிழக மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டியுள்ளதாக கூறினார். தலைவர்கள் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதுதான் நாகரிகமான அரசியலாக இருக்கும் என்றும், அனைத்து தலைவர்களும் ஒவ்வொரு பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்றார்.

பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுக்கு தமிழர்களின் தொன்மையை எடுத்துக்காட்டும் திருக்குறள் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டதை உலகமே பார்த்ததாக எல். முருகன் தெரிவித்தார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்பது தெரியவருவதாக கூறிய அவர், தமிழ் இலக்கியங்கள், தமிழ் பண்பாடு மற்றும் தமிழ் மரபுகளை பிரதமர் மோடி எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வதை மரபாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழுக்கு பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார். முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து பேசிய அவர், முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் செல்லாதது மிகப்பெரிய கேள்வியாக உள்ளதாக கூறினார். முதலமைச்சர் எதற்காக சென்றுள்ளார் என்பது குறித்து அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் ரேஸ் தொடங்கி வைத்தது விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது அதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து நடிகர் அஜித் ரேசில் கலந்து கொண்டார் அதையும் வரவேற்க வேண்டும். தொடர்ந்து திமுக நிர்வாகிகள் சர்ச்சை பேச்சுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் எல் முருகன் திமுக எப்பொழுதும் பெண்கள் மற்றும் பொதுமக்களையும் மதிப்பது இல்லை திமுகவின் பேச்சாளர்கள் அவமதிக்கக்கூடிய பேச்சுகளை பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இதுதான் திமுகவின் கொள்கையாகவும் வைத்திருக்கிறார்கள்.

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும், அதிமுக வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணி சுக்குநூறாக உடைந்துள்ளதாகவும், பாஜக கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாகவும், பாமக தங்களுடன் கூட்டணியில் இருப்பதாகவும் கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சி ஒருபுறம் ஆதரவு, மறுபுறம் எதிர்ப்பு என இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், இதனால் மக்களிடையே குழப்பம் ஏற்படுவதாகவும் மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”