சென்னை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகை காசிமேட்டில் மீன்வள அதிகாரிகள் மற்றும் மீன்வள சங்கத்தினர் பிடித்து, பறிமுதல் செய்தனர்
சென்னை ராயபுரம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுமார் 200 விசைத்திறன் எஞ்சின் கொண்டு மீன்பிடித்து வரப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர எல்லைக்கு சென்றவுடன் தமிழக படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. சுமார் ஏழு படகுகள் ஆந்திரா மீன்வளத்துறை அதிகாரிகளால் காசி மேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற ஏழு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு காரணம் அண்டை மாநிலமான புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இருந்து இரட்டை மடி சுருக்கு வலை பயன்படுத்துவது மேலும் அதிக 650 விசைத்திறன் கொண்ட படகுகள் மூலம் ஆந்திர பகுதியில் மீன் பிடித்ததால் அங்குள்ள கடலில் மீன் குஞ்சு வரை அனைத்தும் வலையில் சிக்கும் இதனால் மீன்வளம் அழிந்து வருவதாக தமிழக மீனவர்களை அவர்கள் பிடித்து வருகிறார்கள்.
இதில் மன உளைச்சலில் இருந்த மீனவர்கள் புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த நாலாம் தேதி கணேசன் என்ற விசைப்படகு ஓட்டுநருடன் சுமார் 13 பேர் காரைக்காலில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டனர்.ஆந்திர மாநிலம் அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது இயந்திரம் பழுதடைந்தது அதை சரி செய்வதற்காக திருவொற்றியூர் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காசிமேட்டில் உள்ள மீனவ சங்கத்தினர் அந்தப் படகை மீட்டு காசிமேட்டில் கொண்டு வந்து கட்டி போட்டுள்ளனர். மேலும் சென்று விடாமல் இருக்க படகில் உள்ள முக்கியமான கருவியை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை மற்றும் மீனவ சங்கத்தினர் முன்னிலையில் புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதன்மூலம் ஆந்திரா, தமிழக எல்லையில் தமிழக மீனவர்களை பிடிப்பது பற்றி முக்கியமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மீனவ தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக விசைத்திறன் கொண்டு இவர்கள் பயன்படுத்தப்படும் படகுகளால் மற்றும் இரட்டை மடி சுருக்கு வலைகளால் மீன் வளம் அழிந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கு படகு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்கங்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பாண்டிச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.