சென்னை, ஆகஸ்ட் 17:
காசிமேடு N4 மீன்பிடி துறைமுகம் பைபர் படகு பாலம் அருகே மீனவர்கள் வலை பின்னிக் கொண்டிருந்தபோது, அரிய வகை உயிரினமான நட்சத்திர ஆமை ஒன்று கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து காவலர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆமையை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேளச்சேரி வனத்துறையைச் சேர்ந்த வேட்டைத் தடுப்பு காவலர் ஜெய் வினோத் வரவழைக்கப்பட்டார். காவல் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவலர்கள் முன்னிலையில் நட்சத்திர ஆமை வேட்டை தடுப்பு காவலர் ஜெய் வினோத்திடம் நட்சத்திர ஆமையை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், வனத்துறையினர் ஆமையை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”