சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவணர் அரங்கத்தில் டிவிஎம் சேவா பாலம் நிறுவனர் தலைவர் எம்.இருளப்பன் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், மற்றும் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கிய தலைமை விருந்தினர் நீதியரசர், என்.ஆனந்த் வெங்கடேஷ் விழாவில் பேசினார். 

அப்போது,  நான் வடசென்னையை சேர்ந்தவன்தான். நான் பெரம்பூரிலேயே மூழ்கி புரண்டு வளர்ந்த ஒரு ஆள். எனக்கும் வியாசர்பாடிக்கும், வண்ணார்பேட்டைக்கும், ராயப்பேட்டைக்கும், எண்ணூருக்கும் என எல்லா இடத்துக்கும் தொடர்பு உண்டு. விழா நடத்துபவருக்கே இது தெரியுமா எனத் தெரியவில்லை. முதலில் நான் வடசென்னை ஆளு... நாம பொறந்து வளர்ந்தது எல்லாமே ஏழை, எளிய மக்களோடு தான். அதனாலதான் நமக்குள்ளேயே அடுத்தவங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உண்டு.

ஆனால் சினிமாவில் தான் வடசென்னைக் காரர்களை கிரிமினல்களை சப்ளை செய்பவர்களாக சித்தரிக்கிறார்கள். அதெல்லாம் பொய். எல்லாமே பொய். நல்ல உள்ளம் படைத்தவர்கள் பலரும் வடசென்னையில் தான் இருக்கிறார்கள். என்னைப் பார்த்தால் ரவுடி மாதிரியா தெரிகிறது. ரொம்ப முக்கியமாக இந்த வடசென்னையோட தவறான அபிப்ராயத்தைப் போக்கவேண்டும். 

வடசென்னையில் சேம்ப்பியன் இருளப்பன். அவர் அடுத்தவர்களுக்கு உதவி செய்து, எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவுக்கு நான் வந்ததே என் இடத்தை சேர்ந்த ஒருவர் நடத்தும் விழா. இதை நான்தான் அங்கீகரிக்க வேண்டும் என்பதால்தான் பங்கேற்றேன் என தொடர்ந்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் இலக்கியங்களை எடுத்துக்காட்டி விழாவில் பேசினார்.  

நிகழ்ச்சியில் தமிழகம் வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என முன்கூட்டியே கருத்துக் கணிப்பில் தெரிவித்த நமது அலைஓசை பத்திரிகை ஆசிரியர் எஸ். சஞ்சீவிராஜ் உள்ளிட்டோருக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”