சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பு அலுவலகத்தில்  எத்தனால் இ- 20  பற்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின்  முன்னாள்  DGM கேசவன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அருண் , தொழில் முனைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்  

அப்பொழுது பேசிய அவர்கள் ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது. சர்க்கரை உற்பத்திக்குப் பிறகு கிடைக்கும் மொலாசஸ் உள்ளிட்ட வேளாண் மூலப்பொருட்களில் இருந்தே பெரும்பாலான எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மேலும், Zero Liquid Discharge (ZLD) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நீர் பயன்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எத்தனால் புதிய எரிபொருள் அல்ல என்றும், உலகின் பல நாடுகளில் பல ஆண்டுகளாக எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் E20 பெட்ரோல் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் E20 எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கமளித்தார்.

E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் இன்ஜின் சேதமடையும், மைலேஜ் குறையும், வாகனத்தின் இயக்கத்திறன் பாதிக்கப்படும், காப்பீடு அல்லது வாரண்டி ரத்து செய்யப்படும் என்பது போன்ற தகவல்களுக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்திய ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI), இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் E20 எரிபொருள் பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், E20 பெட்ரோல் பயன்பாட்டால் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மாசு உமிழ்வு குறைவதோடு, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் குறைகிறது என்றார். இதன் மூலம் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுவதுடன், கரும்பு விவசாயிகள் மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்களின் வருமானமும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பது மத்திய அரசின் எத்தனால் கலப்பு திட்டத்தின் (EBP) ஒரு பகுதியாகும் என்றும், 2014-15 ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு தற்போது 20 சதவீதத்தை எட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் அந்நியச் செலாவணியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகைகளும் விரைவாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இறுதியாக, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேசவன் வலியுறுத்தினார். எத்தனால் புதிய எரிபொருள் அல்ல என்றும், உலகின் பல நாடுகளில் பல ஆண்டுகளாக எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் E20 பெட்ரோல் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் E20 எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கமளித்தார்.

E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் இன்ஜின் சேதமடையும், மைலேஜ் குறையும், வாகனத்தின் இயக்கத்திறன் பாதிக்கப்படும், காப்பீடு அல்லது வாரண்டி ரத்து செய்யப்படும் என்பது போன்ற தகவல்களுக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்திய ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI), இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் E20 எரிபொருள் பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், E20 பெட்ரோல் பயன்பாட்டால் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மாசு உமிழ்வு குறைவதோடு, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் குறைகிறது என்றார். இதன் மூலம் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுவதுடன், கரும்பு விவசாயிகள் மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்களின் வருமானமும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பது மத்திய அரசின் எத்தனால் கலப்பு திட்டத்தின் (EBP) ஒரு பகுதியாகும் என்றும், 2014-15 ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு தற்போது 20 சதவீதத்தை எட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் அந்நியச் செலாவணியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகைகளும் விரைவாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இறுதியாக, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மேலும் எத்தனால் பெட்ரோல் உபயோகப்படுத்துவதால் வாகன எஞ்சின் பழுதடையாது , மைலேஜ் குறையாது  நம்பகத்தன்மையானது  கலந்த எத்தனால் பெட்ரோல் என அவர் தெரிவித்துள்ளார்

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”