சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்தும். மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. 

சென்னை கிண்டியில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் சண்முகம், துணைப் பொதுச்செயலாளர் ஆனந்த முருகன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரமேஷ், விளம்பரப் பிரிவு துணைச்செயலாளர் முருகன், வர்த்தக அணி துணைச் செயலாளர் சிவக்குமார், பொறியாளர் அணி செயலாளர் தேனி வினோத், மாவட்டத் தலைவர்கள் ராமசாமி, சிவசங்கர், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐஜேகே பொதுச்செயலாளர் சண்முகம், சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் புகழை இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், தாய்த் தமிழகதத்துக்காக உயிர் நீத்த தீரன் சின்னமலையின், நினைவுநாளில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர், தலைவர் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து ஆலோசனைப்படியும் தீரன் சின்னமலை திரு உருவச் சிலைக்கு புகழஞ்சலி செலுத்தினோம். அவருடைய போராட்ட களங்களில் அவரை வெல்ல முடியாமல் ஆங்கிலேயர்கள் தவித்தனர். சிலம்பாட்டம், வாள்வீச்சு போன்ற அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கியவர் தீரன் சின்னமலை. இறுதிவரை அவரை போரில் வெல்லமுடியவில்லை. நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டார். அவருடைய வீரத்தையும் புகழை நினைவு கூர்வோம் என்றார். 

Related

“லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆர்.எஸ். ராஜேஷ்!”