சென்னை: இந்திய ஜனநாயக கட்சி தேசியத் தலைவரும், எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் தலைவர் மற்றும் சிம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் வேந்தர்  டாக்டர் பாரிவேந்தர் இல்லத்துக்கு சென்று இளையவேந்தர் அவர்கள், தாய், தந்தையரிடம் வாழ்த்துப் பெற்றார். 

தேசிய தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்த கட்சி நிர்வாகிகள்.

ஐஜேகே மாநில பொதுச்செயலாளர் க.சண்முகம், மாநில  துணைப் பொதுச்செயலாளர் த. ஆனந்த முருகன், கே.வி.ராம், மாநில மகளிரணி இணைச் செயலாளர் பி.லீலாபாய், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் தேனி வினோத் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஏபிஜி.ரமேஷ் ஆகியோர் இளைய வேந்தர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து எஸ்.ஆர். எம் குழுமம், சிம்ஸ் மருத்துவமனை, வேந்தர் டிவி நிர்வாக முக்கிய பொறுப்பாளர்கள் தலைவர் ரவிபச்சமுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”