தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்த ராஜேந்திர அர்லேக்கர், தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆர்.என். ரவி மாற்றம் செய்யப்பட்டதை யடுத்து கேரளம் மாநில ஆளுநராக இருந்த அர்லேகர் தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலைக கவனித்து வந்தார்.
முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு, தமிழக சட்டப்பரவை முதல் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் ஆளுநர் அர்லேகர் உரை இடம்பெற்றது. பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தபோது ஆளுநர் அர்லேகர் பிரதமரை வரவேற்றார். இந்த நிலையில் தமிழகத்தில் முழுநேர ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர்,கர்நாடக ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், ஒடிசா ஆளுநராக ஸ்ரீ பிராஜ்மோகன் ராம், உத்தரகாண்ட் ஆளுநராக டாக்டர் தால்சிங் பிசேன், சிக்கிம் ஆளுநராக துஸ்யந்த் கவுதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.