சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:

தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் 14.8.2026 – வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் – கூடுதல்!

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 – வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கீழ்க்கண்ட வருவாய் மாவட்டங்களில், கீழ்க்கண்ட நிர்வாகிகள் கூடுதலாக தலைமை ஏற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூடுதலாக தலைமை ஏற்போர்மாவட்டம்
திரு. சுதாகர் கே. பரமசிவன் அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர்இராமநாதபுரம்
திரு. முக்கூர் என். சுப்பிரமணியன், M.L.A., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்திருவண்ணாமலை
திரு. எஸ். இராமச்சந்திரன், M.L.A., அவர்கள் – திருவண்ணாமலை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்திருவண்ணாமலை
திரு. பி. பாஸ்கரன் அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்சிவகங்கை
திரு. S.P. சண்முகநாதன் அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (பொறுப்பு)தூத்துக்குடி
திரு. என். சின்னத்துரை அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்தென்காசி
திரு. ராயபுரம் R. மனோ, Ex. MC., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர்தருமபுரி
திரு. நாஞ்சில் M. வின்சென்ட், Ex. MP., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் துணை அமைச்சர்கன்னியாகுமரி
திரு. N. சந்திரசேகரன், Ex. MP., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர்சேலம்
திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி, M.L.A., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்நாமக்கல்
திரு. C. கிருஷ்ணமுரளி, Ex. MLA., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர்திருநெல்வேலி
திரு. S.T.K. ஜெயக்குமார், Ex. MLA., அவர்கள் – கழக அமைப்புச் செயலாளர்அரியலூர்

வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Related

“விவசாயிகளுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்: ”