ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி 20 மாநிலங்கள் 15 ஆயிரம் கிலோ மீட்டர்  விழிப்புணர்வு வாகன பேரணி, சென்னை பெருங்குடியில் தொடங்கியது.

முதலைகள், பாம்புகள், ஆமைகள் உள்ளிட்ட விசித்திரமான மற்றும் பல்வேறு வகையான ஊர்வன உயிரினங்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன. இவை சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகித்தாலும், மனிதன் - வனவிலங்கு மோதல், சாலை விபத்துக்கள், சட்டவிரோத வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் பரவலான அச்சம் ஆகிய காரணங்களால் ஊர்வன உயிரினங்கள் தொடர்ந்து கடும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், ஊர்வன இனங்களை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியாக பிரம்மாண்ட விழிப்புணர்வு பயணம் சென்னை முதலை வங்கி மற்றும் டெம்பிள் ஆஃப் ரெப்டைல்ஸ் அமைப்பின் சார்பில் கணேஷ் முத்தையா மேற்கொண்ட இப்பேரணியை கிஸ்ஃப்ளோ
(Kissflow) மென்பொருள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுரேஷ் சம்பந்தம் சென்னை பெருங்குடியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி மூலம் பொதுமக்களிடையே ஊர்வன உயிரினங்கள் குறித்த தவறான புரிதலை நீக்கி, அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”