"காவிரி பிரச்சனையை திசை திருப்புவதற்காக தமிழக முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் வரவில்லை, ஏற்கனவே இந்த மசோதா தொடர்பாக யோசனைகளையும் திருத்தங்களையும் செய்ய வேண்டும் என கூறியுள்ளோம்.

இந்த மசோதா இன்னும் வரவில்லை,  பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது, ஆணா பெண்ணா என தெரியாமல் எப்படி பெயர் வைப்பது. தொகுதி மறுவறைக்கான காலஅவகாசம் வரவில்லை,  மசோதா வந்த பிறகு அதில் உள்ள சட்ட திருத்தங்கள் வந்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை செய்து தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என கூறினார்.

மேலும் பேசிய அவர், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக ஏற்கனவே திமுக சார்பில் ஆலோசனைகளை கொடுத்துள்ளோம், அதையெல்லாம் கேட்டு எதன் அடிப்படையில் மசோதா நிறைவேற்றுகிறார்கள்  என்பதை பார்க்க வேண்டும் என்றும் 
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கும், தென் மாநிலத்திற்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

தென் மாநிலங்களும், தமிழ்நாடும் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம், தொகுதி மறுசீரமைப்பு  என்பது பிறக்காத குழந்தை, அதனால் அது ஆணா பெண்ணா என பார்த்த பிறகு தான் பெயர் வைக்க வேண்டும். நாங்கள் எல்லாம் குழந்தை பெற்றவர்கள், அதனால் நாங்கள் இதை இப்படிதான் பார்க்க முடியும், இப்போது இருக்கும் பிரச்சனை மேகதாது பிரச்சனை, இதைப்பற்றி எதிர்க்கட்சி தலைவர் சட்டசபையில் தெளிவாக பேசியுள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பேசியுள்ளார்.  குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என தமிழக மக்கள் தாகத்தில் உள்ளார்கள். பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது என்ன அர்த்தம் என தெரிவித்தார்.

நாளை நடைபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்  இதில் கலந்து கொள்ள வேண்டுமா,  வேண்டாமா தலைவர் தெளிவாக கூறுவார். காவிரி பிரச்சனையை திசை திருப்புவதற்காக தமிழக முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்  என தெரிவித்தார்.
 

Related

“ஆண்டிபட்டி அருகே 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடையடைப்பு”