தி.மு.கவின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும், கேடயமுமாக திகழும் சட்டத்துறை என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,

கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திமுக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும், கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்க உற்சாகமூட்டும் வகையில் வாழ்த்து தெரிவிக்கிறேன். எனப் பேசினார்.


வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.