அரசாங்க ஊழியர்களை தன்னுடைய வெற்றிக்காக தவெக அரசு பயன்படுத்தி இருக்கிறது  வீடியோ பதிவு மூலம்  புகார் அளித்திருக்கிறோம்.சட்டமன்றத்தில் முதலமைச்சர் உருவ கேலி செய்யும் போது தவெக  எல்லாம் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். 

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகாரிகளை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துவது சம்பந்தமாக புகார் மனு அளித்தார்.

புகார் மனு அளித்த பிறகு திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் சம்பந்தமாக புகார் மனு அளித்திருக்கிறோம் 

இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் இந்த அரசு அரசாங்கத்தை அரசாங்க ஊழியர்களை நிர்வாகத்தை துஷ்பிரயோகம் செய்து இடைத்தேர்தலில் எப்படியாவது வென்று விடலாம் என்று நினைக்கிறார்கள் இது குறித்தான புகாரளித்திருக்கிறோம். மதுராந்தகதில் தவெக வேட்பாளர் தன்னடைய பிரச்சாரத்தில் வாக்காளர்கள் முன்னரே அரசாங்க ஊழியர்களிம் இதை செய்து தாருங்கள் என்று கூறியுள்ளார தன்னுடைய வெற்றிக்காக தவெக அரசு அராங்க ஊழியரை பயன்படுத்தி இருக்கிறது என நாங்கள் எடுத்த வீடியோ பதிவு மூலம் தற்போது புகார் அளித்திருக்கிறோம்.

நேற்றைய தினம் விஜய் செல்லும்போது கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர் வரும் செலவு மேடை மடடும் தான் கட்சி தரும், கொடி பேனர் தடுப்புகள் என 20 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார்கள், இந்த செலவை மதுராந்தகம் வேட்பாளர் பெயரில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

ஒவ்வொரு வீட்டிற்கும் டிபன் கேரியர் கொடுத்திருக்கிறார்கள், இது வெறும் டிபன் கேரியர் மட்டுமல்ல இதில் ஒவ்வொருவருக்கும் 10,000 வைத்துக் கொடுக்க உள்ளாதாக அங்கு இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே அங்கு கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும்,அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான அவதூறான அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் பேசி இருக்கிறார், எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறோம். அனைவராலும் மிகுந்த கண்ணியமாக பேசக் கூடியவர் என்று பாராட்டு பெற்றவர் தான் முக ஸ்டாலின். சட்டமன்றத்தில் முதலமைச்சர் உருவ கேலி செய்யும் போது தவெக  எல்லாம் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை, எனவே இவர்களுக்கெல்லாம் பேச தகுதியே கிடையாது. முதலமைச்சர் விஜய் நான் என்ன அதுவா என்று கேட்கிறார். அதற்கு யாரும் விளக்கம் கேட்கவில்லையே. 

நாங்கள் எப்போதும் பணத்தை நம்பி தேர்தலை சந்திப்பதில்லை. மக்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கின்றோம். தவெக தோல்வி பயத்தால் தோல்வி ஜீரத்தால் இருக்கிறார்கள். திமுகவும் பணம் கொடுப்பதாக கம்யூனிஸ்ட் கூறகிறார்களே என்ற கேளவிக்கு, கம்யூனிஸ்ட் தோழர்கள் எங்கள் மீது குறை கூறுவதாக இருந்தால் ஆதாரத்துடன் கூறட்டும் நாங்கள் வீடியோ ஆதாரத்துடன் தான் கூறுகிறோம்,

இந்தியா கூட்டணியில் த.வெ.க இருப்பதாக அமைச்சர் ஆதவ் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, தினம்தோறும் அவர்களே சொல்லி சொல்லி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்றார்.

Related

“அரசு துறையில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்யவேண்டும் ”