சென்னை: கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தனது சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும் முதல்வர் விஜய். அதை விடுத்து  கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக டிஎன்பிஎஸ்சி-க்கு படிப்பவர்களின் வாய்ப்பை பறித்திருக்கிறார் ” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கரூரில் பேசியது வழக்கமான ஸ்கிரிப்ட் தான். ஒரு சிஎம் னா டிப்ளமேட்டிங்கா இருக்கணும். சினிமாவில் ஒரு ஷாட் எடுப்பதை போல, வசனத்தை ஒப்பிக்கிறார். இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் விஜய்யின் கரூர் பயணம் அமைந்தது. தவெக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என சொன்னீர்கள்; அதை செய்யவில்லை. மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் குறித்து கரூரில் பேசியிருக்கலாம்; ஆனால் பேசவில்லை. 

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு  ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவில்லை. விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்கள். தான் சம்பாதித்த பணத்தை எம்ஜிஆர் வாரி வாரி வழங்கினார். 1983 ல் நடிப்புக்கு வந்த விஜய் கோடி கோடியாக சம்பாதித்திருக்கிறார். கரூரில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே?. அரசு வேலையை கொடுத்து, டிஎன்பிஎஸ்சி-க்கு படிப்பவர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்?. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது. தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே? 

தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி என விஜய் பேசியிருக்கிறார். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாரை உடன் வைத்துவிட்டு, இதையெல்லாம் அவர் பேசுகிறார்?. கோழி திருடனை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தண்டோரா போட்டானாம் அந்தக் கதையாக இருக்கிறது. தன்னை முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார்” என்று அவர் கூறினார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”