கடலூர்:  மனிதவள மேலாண்மை றை அமைச்சர் டி.சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஒருங்கிணைந்த திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடலூர் மாநகர திமுக அலுவலகத்தில் இருந்து திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள், தொண்டர்கள் திமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கடலூர் புதுவை சாலையில் பேரணியாக தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து அமைச்சரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.  தொடர்ந்து கடலூர் புதுவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாக கைது செய்தனர்.  கைது செய்யும்பொழுது போலீசாருக்கும் - திமுக காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”