சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் துணைநிற்க "உதவும் கை" என்ற மக்கள் நல முன்னெடுப்பை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்  துவக்கி வைத்தார். 

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தலா 3 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களத்தில் நேரடியாக மக்கள் பணியாற்றுவர்.

நேற்றைய தினம் மக்கள் தலைவர் ராகுல் காந்தி , "தமிழ்நாட்டில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எனது ஆறுதல்கள். காங்கிரஸ் தலைவர்களும் தோழர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி முதியவர்கள், எளிய மக்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகச் சகோதர, சகோதரிகளே... நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம்" என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது வழிகாட்டுதலின்படி, சென்னை சத்யமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கும் "வெள்ள நிவாரண உதவி மையத்தை" இன்று (23.10.2026, வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில் தொடங்கி வைக்கிறேன். மழை வெள்ள இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  விஜய் அவர்களின் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கான இப்பணியில் காங்கிரஸ் கைகோர்த்து களத்தில் நிற்கிறது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விரிவான களப்பணிக் குழு அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன . உதவி தேவைப்படுவோர் மற்றும் நிவாரணப் பணிகளில் பங்களிக்க விரும்பும் தோழர்கள் / தன்னார்வலர்கள் தொடர்புகொள்ள:

 7871004668 | 8681004204 

​மக்கள் தலைவர் ராகுல் காந்தி வழிகாட்டுதலோடு, மக்களின் துயர் துடைக்க காங்கிரஸ் பேரியக்கம் என்றும் களத்தில் நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். 

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”