சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்​தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து கொடியைசத்துத் தொடங்கி வைத்தனர். மாலை 4 மணி முதல் பொது மக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்​லியில் இருந்து தனி விமானத்தில் புறப்​பட்டு, இன்று காலை 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போரூருக்கு சென்றபோது, விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை ரோடுஷோ மேற்கொண்டார். அப்போது ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். போரூர் வந்தடைந்த பிரதமர் மோடி, பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அப்போது தமிழக முதல்வர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன்பின்னர், மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பயணித்தனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து கொடியைசத்துத் தொடங்கி வைத்தனர். சேவையை தொடங்கி வைத்த பிரதமர் கவுன்ட்டரில் டிக்கெட் எடுத்தார். தொடர்ந்து, பிரதமரும், முதல்வரும் மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்தனர். தொடர்ந்து மாலை 4 மணி முதல் பொது மக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

“பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு : திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் கருப்புக் கொடி ஏந்தி சாலை மறியல்!”