தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக இன்று இரவு துபாய் வழியாக லண்டனுக்கு செல்ல உள்ளார். லண்டனில் தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைக்க உள்ளார்.  மேலும் தமிழகத்திற்கு அதிக அளவு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வரும் அவர் விமான நிலையத்தில் அவருக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. முதலமைச்சர் உள்பட முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்தில் இருந்து கேட் 6 வழியாக செல்வார்கள்.

கோப்புப் படம்

ஆனால் இந்த சிறப்பு பாதை முதலமைச்சர் தவிர்த்து சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் செல்லும் வழியில் செல்ல முடிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக சர்வதே முனையத்தில் புறப்பாடு பகுதியில் உள்ள 9 வது நுழைவு வாயில் வழியாக முதலமைச்சர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல்வர் வந்து வந்து செல்லும் பகுதிகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”