தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இன்று (15.8.2026) சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு படங்களைக் காணலாம்.

சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் தேசியக் கொடியேற்று விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வருகை தந்தார்.

சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திரத் திருநாள் விழாவில், தகைசால் தமிழர் விருது, டாக்டர் A.P.J.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காகத் தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

விருதாளர்கள்

விருதாளர்கள்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.