சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தைத் திறந்து வைத்து, தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். மேலும், எம்.கே.பி. நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக்கடையைப் பார்வையிட்டு, தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிடும் வகையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களையும் வழங்கினார்.
பின்னர், வியாசர்பாடியில் செயல்பட்டுவரும் மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சென்னை, வியாசர்பாடி, சர்மா நகர் முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இப்புதுப்பிக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்தள வசதி, மாற்றுத்திறனாளி களுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமையப் பெற்றுள்ளது.அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து
பார்வையிட்டார். இப்புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது. இ-சேவை மையத்தில் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்க வருகைதந்த மக்களிடம்தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடி, விண்ணப்பித்த 5 நபர்களுக்கு உடனடியாக உரிய சான்றிதழ்களை வழங்கினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.