பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேதாந்தம் முருகப்பா நாயக்கர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இந்த தெருவில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறி முற்றுகையிட்ட நிலையில் அந்தப் பகுதி தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது இந்த இடம் குடும்ப சொத்து என்றும் அதை ஒருவர் மட்டும் பட்டா சிட்டா ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்து உள்ளார் என அந்தப் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தர இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்து அப்பகுதி மக்கள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் சிவா பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.
குறிப்பாக இந்த இடம் சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் போராட்டத்தை கைவிட மறுத்த பொதுமக்களை தொடர்ந்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக நீதிமன்றம் அந்தப் பகுதியில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதால் எந்த பணிகளும் செய்ய முடியாது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.