சென்னை: சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15 வது மண்டலம் 200 வது வார்டுக்குட்பட்ட ஜவகர் நகர், ஏழில்முக நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் குடிநீர் போதுமானதாக இல்லை என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை .இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்த அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் நேரில் சென்று அதிகாரியிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்து விரைவில் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று செம்மஞ்சேரியில் இருந்து எழில்முகநகர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில்:- கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம்.சம்பந்தப்பட்ட அதிகாரம் சென்று புகார் தெரிவித்தால் உங்கள் பகுதிக்கு வரும் பகுதி ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறினர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதனால் நாங்கள் குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.