நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டமன்றத்தில் பேசியதன் சுருக்கம்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. நிதி மேலாண்மை

ஒரு புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், முதல் 100 நாட்கள் மிக முக்கியமானவை. அந்த 100 நாட்களில்தான் புதிய அரசின் கொள்கைகள், நோக்கம் போன்றவை தெளிவாக்கப்பட்டு, அந்த அரசு எடுக்கும் புதிய முயற்சிகள், அதை அடைய பயணிக்கும் பாதை ஆகியவை தீர்மானிக்கப்படும். இந்த அடிப்படையில்தான் முதலீடுகளும் ஈர்க்கப்படும்.

நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெரும்பாலும் புதிய அரசுகள் 100 நாள் செயல் திட்டங்களை வெளியிடுவதும், அதனைத் தொடர்ந்து கண்காணித்து இலக்குகளை அடைய முயற்சிப்பதும் வழக்கம்.

அவ்வாறு அமையும் புதிய அரசுகள், ஏற்கனவே உள்ள நிதிநிலையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, தாங்கள் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.

இதுபோன்ற வெள்ளை அறிக்கையை அதிமுக அரசும் வெளியிட்டுள்ளது. திமுக அரசும் வெளியிட்டுள்ளது. இப்போது தவெக அரசும் வெளியிட்டுள்ளது. இதை வருங்காலத் திட்டங்களை வகுக்க ஓர் அடித்தளமாகப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான்.

இந்த அரசும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றும், வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவாக ரூ.78,324 கோடியாக உயர்ந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

கொரோனா பாதித்த ஆண்டில் கூட இந்த அளவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அதேபோல் வட்டி சுமை மிகவும் அதிகமாகிவிட்டது என்றும், மாநில சொந்த வரி வருவாய், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மிகவும் குறைந்துவிட்டது என்றும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வெள்ளை அறிக்கையில், மாநில வரி வருவாயில் கசிவுகளும் இழப்புகளும் உள்ளன என்றும், அதை சரி செய்து வருவாயை உயர்த்துவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் செலவைக் கட்டுப்படுத்தவும், சிறந்த மேலாண்மை மூலம் செலவைக் குறைக்கவும், பொதுத்துறை நிறுவனங்களில் சீரமைப்பு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளீர்கள்.

ஆனால் 2026-27 திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட அறிக்கையைப் பார்க்கும்போது, நீங்கள் கூறிய எதையும் செய்ய முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகிறது. குறிப்பாக நிதி மேலாண்மை பாதையை சரிப்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை.

உதாரணமாக: 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் சொந்த வரி வருவாய் – ரூ.2,29,579 கோடி, 2026-27 திருத்தப்பட்ட பட்ஜெட்டில் சொந்த வரி வருவாய் – ரூ.2,26,740 கோடி, அதாவது, இடைக்கால அறிக்கையைவிட இந்த பட்ஜெட்டில் சொந்த வரி வருவாய் ரூ.2,839 கோடி குறைந்துவிட்டது.

நீங்கள் வெள்ளை அறிக்கையிலும், இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் வெளிநாட்டு மதுபானத்திற்கு தற்போது போடப்பட்டுள்ள ஆயத்தீர்வை வரியால் ரூ.1,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும், சரக்கு சேவை வரி, பதிவுத்துறை, கனிம வளம் போன்றவற்றில் சீரமைப்பு செய்து ரூ.15,000 கோடி கூடுதலாகப் பெறுவோம் என்றும் கூறியுள்ளீர்கள்.

அந்தத் தொகை எங்கே போனது?, அடுத்த ஆறு மாதங்கள் என எடுத்துக்கொண்டாலும், இவை அனைத்தும் சேர்ந்து குறைந்தது ரூ.8,000 கோடி கூடுதலாகப் பெறப்பட்டிருக்க வேண்டுமே? அது ஏன் வருவாய் வரவில் கொண்டு வரப்படவில்லை?.

அப்படியென்றால், இவையெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்க்க மட்டுமே பயன்படுத்தப்படும் கவர்ச்சி வார்த்தைகளா?. அதேபோல், வருவாய் செலவை எடுத்துக்கொண்டால்: 2026-27 இடைக்கால அறிக்கையின்படி வருவாய் செலவு – ரூ.3,93,272 கோடி,2026-27 திருத்திய மதிப்பீட்டின்படி வருவாய் செலவு – ரூ.4,05,802 கோடி, அதாவது, திருத்திய மதிப்பீட்டில் வருவாய் செலவு ரூ.12,530 கோடி உயர்ந்துவிட்டது.

அப்படியானால், நீங்கள் வருவாய் செலவு மேலாண்மை செய்து செலவைக் குறைப்போம் என்றும், ஒப்பந்தப் புள்ளிகளைச் சீரமைத்து லஞ்சத்தை ஒழித்து செலவைக் குறைப்போம் என்றும் சொன்னது, இந்தப் புள்ளி விவரங்களில் வெளிப்படவில்லையே. அது ஏன்?

மேலும், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டது என்ற கேள்விக்கு நிதித்துறை செயலாளர், ரூ.4,000 கோடி தவறாக ஒதுக்கீடு செய்யப்பட்டதால் குறைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இது தவிர, உறுதியளிக்கப்பட்ட பெண்கள் திட்டத்திற்கான நிதி, இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.14,000 கோடி திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தொகை வருவாய் செலவில் ஏன் குறையவில்லை?.உறுதியளிக்கப்பட்ட பெண்கள் திட்டத்திற்கான நிதி திரும்பப் பெறப்பட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதா? இப்போது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கருத்துகளின் அடிப்படையில் செலவைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் செலவு குறையவில்லை?

செலவு: நீங்கள் அறிவித்த புதிய திட்டங்களில் செலவு அதிகமாக உள்ளதாகக் கூறப்படும் சில திட்டங்களை எடுத்துக்கொண்டால்: குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கான தள்ளுபடி – ரூ.5,932 கோடி, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு வழங்கிய 200 யூனிட் இலவச மின்சாரம் – ரூ.1,545 கோடி, தாய்மாமன் தங்கமோதிரம் – ரூ.564 கோடி, அண்ணன் சீர் – ரூ.812 கோடி இவை அனைத்தையும் சேர்த்தாலும் ரூ.8,849 கோடி தான் வருகிறது. எனவே, வருவாய் செலவு ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதற்கு விளக்கம் தேவை. இப்படி வருவாயைப் பெருக்கவும் நடவடிக்கை இல்லை. வருவாய் செலவைக் கட்டுப்படுத்தவும் முயற்சி இல்லை. எனவே, வருவாய் பற்றாக்குறை ரூ.48,696 கோடியிலிருந்து ரூ.55,775 கோடியாக உயர்ந்துவிட்டது.

மூலதனச் செலவு ரூ.59,562 கோடியிலிருந்து ரூ.56,985 கோடியாக குறைந்துவிட்டது. மாநில உற்பத்தி மதிப்பில் மாநில சொந்த வரி வருவாயின் பங்கும் உயரவில்லை. ஆகவே, நிதி மேலாண்மைக்கான பாதை (Fiscal Consolidation Path) சரிவரத் தெளிவுபடுத்தப்படவில்லை. அதற்கான எந்த முயற்சியும் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை என்பதைத்தான் இது தெளிவாகக் காட்டுகிறது.

2011ஆம் ஆண்டு அம்மா ஆட்சி பொறுப்பேற்றபோது பெரிய அளவு கடன் சுமை இருந்தாலும், சுமார் ரூ.17 ஆயிரம் கோடி வரை கூடுதல் நிதியைத் திரட்டி, பல திட்டங்களை நிறைவேற்றினார்கள். ஆனால் தவெக அரசு நிதிநிலையை சீரமைத்து, நிதி மேலாண்மைக்கான பாதையை சரிவர வகுக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

2. மாநிலத்தின் கடன் அளவு : மாநிலத்தின் கடன் அளவு ரூ.10.98 லட்சம் கோடி என்றும், அதனால் ஏற்படக்கூடிய வட்டி செலவு ரூ.78,683 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில உற்பத்தி மதிப்பில் நிகரக் கடன் அளவு, கடந்த திமுக ஆட்சியில் வெளியிட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 27.03 சதவீதமாக இருந்தது. இப்போது நீங்கள் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் இது 27.01 சதவீதம்.

எனவே கடன் அளவிலோ, அதன் சுமையிலோ எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் இந்த மூன்று மாதத்திலேயே ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெறப்பட்டு, அதில் ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் செலவுக்கு மட்டுமே செலவு செய்துள்ளீர்கள். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி கடனை, ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

3. நிதிநிலை அறிக்கை பற்றிய விவரங்கள்: இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. எந்தப் புதிய திட்டங்களுமே அறிவிக்கப்படவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் பெயரை மாற்றி ‘வெற்றி – வெற்றி’ என்று சேர்த்துள்ளீர்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது? மக்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.

அரசுகள் மாறும்போது அவர்களின் அறிவையும், அனுபவத்தையும் வைத்து மக்களுக்கான புதிய திட்டங்களைத் தீட்டி, அவர்கள் விரும்பும் பெயரை வைத்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் ஒரு அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு புதிய அரசு பெயரை மாற்றி அறிவிப்பதால் மக்களுக்கு குழப்பம்தான் ஏற்படும்.

அம்மா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: மகளிர் ஆடு வழங்கும் திட்டம் – இப்போது ‘வெற்றி’ மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம், அம்மா ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது மக்களுக்கும் நன்கு புரிந்தது. இப்போது ‘அண்ணன் சீர்’ திட்டம் என்று பெயர் மாற்றியுள்ளீர்கள்.

அம்மா ஆட்சியின் மடிக்கணினி திட்டம் – இப்போது ‘வெற்றி’ லேப்டாப், எங்கள் ஆட்சியில் இருந்த பசுமை வீடுகள் திட்டம், திமுக ஆட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இப்போது ‘வெற்றி’ வீடு திட்டம், எங்கள் ஆட்சியில் இருந்த தாய் திட்டம், திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டமாகி, இப்போது தமிழ்நாடு ‘வெற்றி’ திட்டமாகியுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்குக்கூட ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளீர்கள்.

இவ்வாறு பல திட்டங்களுக்கு ‘வெற்றி’ என்ற அடைமொழியை கொடுத்துள்ளீர்கள். ‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று ஆட்சிக்கு வந்த நீங்கள், மக்கள் பிரச்சினையைத் தீர்க்க புதிய யோசனை கூட உங்களிடம் இல்லை என்று கேட்கின்றேன். இது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறையில் ஒரு வேடிக்கையான அறிவிப்பு Super Class, Super Campus என்ற திட்டம். இத்திட்டத்தில்: Super Safety, Super Students, Super Campuses,Under Super, CM Governance என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

இந்தத் திட்டம் 10,000 பள்ளிகளில், ரூ.139 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அப்படியானால், மற்ற பள்ளிகளில் இத்திட்டத்தில் உள்ள பலன்களான தூய்மை, தினமும் 7 முறை சுத்தம் செய்தல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், 24 மணி நேர பாதுகாப்பு போன்றவை சிறப்பாக இருக்காதா?

இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தினால்தான் அதன் பயன் அனைவரையும் சென்றடையும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். சில முக்கியத் திட்டங்களை ஆய்வோடு நிறுத்திவிட்டீர்கள். செயற்கை நுண்ணறிவு நகரம் போன்றவை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய முதலமைச்சரைப் பார்த்து, மத்திய அரசுக்கு பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பினார். இப்போதும் நீங்கள் அவ்வாறு சில முக்கியப் பிரச்சினைகளில் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

‘பேசாமல் செயல்படுவோம்’ என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் பேசாமலேயே இருந்து செயலுமின்றி, நமது உரிமைகளை இந்த அரசு பறிகொடுத்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

4. இளைஞர் நலன் – வேலைவாய்ப்பு: இன்றைய அளவில் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். இவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது அரசின் தலையாய கடமை. இந்த நிதிநிலை அறிக்கையில் 24 ஆயிரம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பெற பயிற்சி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள 90 சதவீதம் படித்த இளைஞர்கள் கணினித் துறையைத் தவிர பிற துறைகளில் பட்டம் பெற்றவர்கள். எனவே அவர்களுக்கு உரியவாறு திறன் பயிற்சியை வழங்கி, அவர்களுக்கான வேலை வாய்ப்பை கிராமப்புறங்களில், குறிப்பாக ஏற்படுத்தித் தந்தால்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் ஒரு பெரிய சமூகப் பொருளாதாரத் தேக்கத்தை சரிசெய்ய முடியும்.

இதற்கான முயற்சிகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களை தொழில் முனைவோராகவும், கிராமப்புறத் தொழில் மற்றும் விவசாயம், உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்களையும் ஊக்குவித்து, சிறப்பான உதவிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பல துறைகளில், குறிப்பாக சமூக நீதித் துறை, கூட்டுறவு, பொது விநியோகம், சிறு குறு தொழில் மேம்பாட்டுத் துறை, ஜவுளி மற்றும் கைத்தறித் துறை என பல துறைகளில் எந்தவிதமான கூடுதல் கவனமும் செலுத்தப்படவில்லை.

5. அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல்:

அரசுத் துறைகளில்: அரசு அலுவலர்கள் – 3 லட்சம், ஆசிரியர்கள் – 3.50 லட்சம்,,சுகாதாரத் துறை – 1 லட்சம் (மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்), காவல்துறை – 1.20 லட்சம்,சமூக நலத்துறை – 2.75 லட்சம் (சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்) என மொத்தம் சுமார் 13.30 லட்சம் பணியிடங்கள் உள்ளன.

2026 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, இன்றைய நிலையில் அரசுத் துறைகளில் சுமார் 3.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அவற்றில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் மட்டும் சுமார் 85 ஆயிரம் காலியாக உள்ளன.

அரசு பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்துக் கழகங்கள், மின்சாரத் துறை, வீட்டு வசதி வாரியம் போன்ற 77 பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை சுமார் 5 முதல் 7 சதவீதம். அதாவது அரசுத் துறைகளில் 70 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். அதேபோல் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

கடந்த கால திமுக ஆட்சியில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த அரசின் நிதிநிலை அறிக்கையில் தேர்வாணைய அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அரசு திறம்பட செயல்பட வேண்டுமென்றால், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களைத் துரிதமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. அரசு போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய நிலை: பொதுப் போக்குவரத்து ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. அம்மா ஆட்சியில் ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, பேருந்துகள் சிறப்பாக இயக்கப்பட்டன. 2011 முதல் 2021 வரை அம்மா அரசில் சுமார் 16,500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.

ஆனால் இன்றைய நிலையில் டயர் கழன்று போகும் வண்டிகளும், இடை இடையே பழுதடைந்து நின்று போகும் வண்டிகளும் பல உள்ளன. காலாவதியான இந்த சாதாரண பேருந்துகளை மாற்ற நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. ஆனால் குளிர்சாதன மின்சார வண்டிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளது.

இதுதான் ஏழை, எளியவர்களைப் பாதுகாக்கும் அரசா என்று கேட்கின்றேன்? கடந்த கால திமுக ஆட்சியில் பேருந்துகளின் ஆயுட்காலத்தையும், வாகனத்தின் ஓடும் தூரத்தையும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இப்பேருந்துகள் சாலையில் ஓடும்போது பல விபத்துகள் ஏற்பட்டன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் இப்பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் உயிரோடு விளையாடும் வகையில் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையிலும் இயங்கும் பழைய பேருந்துகள் எப்போது மாற்றப்படும்? அரசாணை எண்.70, நாள் 8.7.2021-ன் படி

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பயன்பாட்டு காலம் 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. 7 லட்சம் கி.மீ. என்பதிலிருந்து 12 லட்சம் கி.மீ. ஆக உயர்த்தப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பயன்பாட்டு காலம் 6 ஆண்டுகளில் இருந்து 9 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. 7 லட்சம் கி.மீ. என்பதிலிருந்து 12 லட்சம் கி.மீ. ஆகவும் உயர்த்தப்பட்டது. எனக் குறிப்பிட்டுப் பேசினார். 

7. வேளாண் நிதிநிலை அறிக்கை: நெல்லுக்கான ஊக்கத் தொகையை அரசு உயர்த்தியுள்ளது குறித்து நேற்று சட்டப்பேரவையில் இந்த அரசு அறிவித்தது.  சாதாரன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டுமே இந்த அரசு உயர்த்தியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகள் விளைவிக்கின்ற நெல்தான் நமது பொது விநியோகத் திட்டத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது.  இந்த ஆண்டு குறுவை பொய்த்துவிட்ட நிலையில் ‘சம்பா’-வும் பொய்த்துவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். அவர்கள் விளைவிக்கின்ற நெல்லை முறையாக வாங்கி பராமரிப்பதற்கான உலர்களங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற கட்டமைப்புகளை வலுப்படத்தக்கூட எந்த முயற்சியும் இந்த நிலைநிலை அறிக்கையில் இல்லை. உங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாயும், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.  அந்த உதவிகளையும் விரைவில் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மாண்புமிகு அம்மாவின் அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடி செய்தது. அம்மா 2016ல் பதவியேற்றவுடன் - 12.02 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி விவசாய கடன் தள்ளுபடி அம்மாவின் அரசு 2021ல் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி ஆனால்  இந்த அரசோ தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் ரூ.75 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தால் அவர்களுக்கு முழுமையாகவும், ரூ.75 ஆயிரத்திற்கு மேல் கடன் வாங்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.  எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். பயிர் காப்பீட்டு திட்டத்தின் எங்கள் ஆட்சியில் அதிக அளவு காப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெற்று தந்தது எங்கள் அரசு. 

உழவன் செயலி :வேளாண்மைத்துறை  அமைச்சர் 6.8.2026 அன்று நிதிநிலை அறிக்கையில் புதிய உழவன் செயலி உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது தலைமையிலான அம்மாவின் அரசில் 05.04.2018 அன்று “உழவன்” என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினேன். இச்செயலி என்ன ஆயிற்று.  தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி அச்செயலியை மேம்படுத்தவா?  அல்லது புதிதாக உருவாக்கவா?  உரம் இருப்பு, முக்கிய அணைகளில் நீர் இருப்பு, வானிலை அடிப்படையிலான வேளாண் அறிவுரைகள், வேளாண் இயந்திர வாடகை மையம் குறித்த தகவல்கள், பயிர்கள் சந்தை நிலவரம், வேளாண் அதிகாரிகள் வருகை விவரம், உள்ளிட்ட அனைத்து வேளாண் செய்திகளையும் அறிந்து பயன் பெறலாம். இச்செயலியை பாராட்டி மத்திய அரசின் தேசிய மின் ஆளுமை விருது இரண்டுமுறை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.  உழவன் செயலியை மீண்டும் முழுமையாக பயன்படுத்த இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். 

9.  ஒசூர் மலர் ஏல மையம்: ஓசூரில் விளையும் ரோஜா பூக்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யபடுவதால் மலர் வியாபாரிகளுக்காக சர்வதேச ஏல மையம் சுமார் 26 கோடி ரூபாயில் கட்டப்பட்டு கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. ஒசூர் மலர் ஏல மையத்தை உடனடியாக திறந்து மலர் வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். மாம்பழம்  எங்கள் ஆட்சி காலத்தில் சேலம், காஞ்சிபுரம், தேனி, கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 5 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில், பழம் பதனிடும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக கிருஷ்ணகிரியில் மாம்பழம் கூழ் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட்டது.   மரவள்ளிக் கிழங்கு இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி தெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  எனவே  மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மரவள்ளிக் கிழங்கு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.   மாவுப்பூச்சி தாக்குதலால் பெரும் எனவே மரவள்ளி கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

  10. விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம்: எங்கள் ஆட்சியில் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.  விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன். மேலும் தட்கல் முறையில் பணம் செலுத்தியவர்களுக்கும் கடந்த 6 மாத காலமாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. (சுமார் 65 ஆயிரம் ) 10.  சீமை கருவேல மரங்களை அகற்றுதல் தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்துகின்றன; மண்ணின் வளத்தை நச்சுப்படுத்தியும், பிற நாட்டுப்புற தாவரங்களை அழிக்கவும் செய்கின்றன.  உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சீமை கருவேல மரங்களை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.  

11 . கால்நடை பூங்கா / 100 ஏரி திட்டம் / அத்திக்கடவு- அவினாசி திட்டம் : கால்நடை பூங்கா உலகத் தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் தலைவாசலில் சுமார் 1,102 ஏக்கர் நிலப்பரப்பில் 1,023 கோடி கட்ட திட்டமிடப்பட்டு, இப்பூங்கவின் ஒரு பகுதியை 22.2.2021 அன்று நானே திறந்து வைத்தேன். கடந்த திமுக அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.  இந்த அரசு ஆராய்ச்சி நிலையத்தின் நிலுவை பணிகளை முழுமைசெய்து  வேளாண் பெருமக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.   மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு வழங்கும் நீரேற்று பாசனத் திட்டம்.  15.7.2019 அன்று சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்தேன். மதிப்பீடு  - 565 கோடி ரூபாய் - தேவைப்படும் தண்ணீர் 555 மி.கன அடி (0.55 டி.எம்.சி) 15 

 மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சேர்ந்த 8 ஒன்றியங்களிலுள்ள 100 ஏரிகளுக்குக் கொண்டு செல்லப்படும். நிலத்தடி நீர் உயரும். சுமார் 4,500 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும், ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.    04.03.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது  முதற்கட்ட பணிகள்  முடிவடைந்து 26.2.2021 அன்று நானே திறந்து வைத்தேன்.  கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் இத்திட்டம் மெத்தன போக்கில் நடைபெற்றதால் பணிகள் முழுமை பெறவில்லை.  இந்த ஆட்சியிலாவது இத்திட்டத்தை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன். நடவடிக்கைகள் அத்திக்கடவு - அவிநாசி  வெள்ளக் கால்வாய் திட்டம் எடுக்குமாறு  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அறிவித்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு மாநில நிதியிலேயே 25.12.2019 அன்று இப்பணிகள் துவக்கப்பட்டு, 2021 பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. தேவைப்படும் நீர் 1.5 டி.எம்.சி  பயன்படும் மாவட்டங்கள் – கோவை, திருப்பூர் ஈரோடு – 32 பொதுப்பணி குளங்கள், 42 ஒன்றிய குளங்கள், 971 குட்டைகள் நிரப்பப்படும். சுமார் 24,500 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.  மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் மதிப்பீடு சுமார் ரூ.1,652 கோடி  கடந்த திமுக ஆட்சியில் 3 ஆண்டுகள் கழித்து எஞ்சிய 10சதவீதப் பணிகளை ரூ.250 கோடி கூடுதல் செலவில் முடிக்கப்பட்டது.  இந்த அரசு அத்திக்கடவு –அவினாசி 2ம் கட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘நடந்தாய் வாழி காவேரி’ காவேரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, அம்மாவின் அரசில் கொண்டு வந்த ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தை 11,250 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த நாங்கள் இருந்தபோது மத்திய அரசுக்கு 21.10.2019 அன்று அனுப்பி அனுமதி கோரியிருந்தோம்.    கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசு 60:40 என்ற பகிர்வு முறையில் அதற்கான அனுமதியையும் தந்து முதற் கட்டமாக ரூ.934 கோடிக்கு ஒப்புதலும் அளித்தது.  ஆனால் திமுக அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.  இதற்கு மீண்டும் ஏன் சாத்திய கூறு ஆய்வு செய்ய  வேண்டும்?  தடூப்பணைகள்  காவேரி (நஞ்சை-புகளூர்), பாலாறு, கொள்ளிடம் (ஆதனூர்குமாரமங்கலம்)  குறுக்கே பல தடுப்பணைகளை எங்கள் அரசு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது,. விரைவில் இப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

 நதிகள் இணைப்பு:  இந்நிதி நிலை அறிக்கையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் கட்டளை தடுப்பணையிலிருந்து வெள்ள உபரி நீரை திருப்பி, வறட்சி பகுதிகளுக்கு திருப்ப நான் முதலமைச்சராக இருந்தபோது சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு கொள்கையளவில்  ‘காவிரி-வெள்ளாறு-வைகை-குண்டாறு’ இணைப்புக்கு ஒப்புதல் 17 அளிக்கப்பட்டு,  இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக காவிரி-வெள்ளாறு வரை திட்டம் அனுமதிக்கப்பட்டு, அத்திட்டத்திற்கும் நில எடுப்பு பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  நில எடுப்பு பணிகளும் கணிசமாக முடிக்கப்பட்டு, திட்டத்தையும் நானே துவக்கி வைத்தேன்.  ஆனால் கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது நீங்கள் ஒதுக்கியுள்ள ரூ150 கோடி நிதி திட்ட அறிக்கை தயாரிக்க என மாண்புமிகு அமைச்சர் நேற்று பதிலளித்தார். ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டத்திற்கு மீண்டு திட்ட அறிக்கை ஏன்?  எனவே கூடுதல் நிதி ஒதுக்கி, இத்திட்டத்தை விரைவாக முடிக்கவும், அடுத்தக் கட்டப் பணிகளை தொடங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு காரணமாக தண்ணீர் கடலில் கலந்து வீனாகிறது.  எனவே பிற நதிகள் இணைப்பதைப்போல தாமிரபரணி – வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கும் சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்  கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகா வண்ணம் தடுக்க ஆற்று முகத்துவராங்களில் தடுப்பு சுவர்களுடன் கூடிய தடுப்பணைகளை, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் அமைத்தோம்.  இது போன்ற முன்னெடுப்புகளை இந்த அரசு செய்ய வேண்டுமென்ற கேட்டுக்கொள்கிறேன். கூவம், அடையாறு மேம்பாடு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது எனப் பேசினார். 

 

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”