சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதுக்கு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெருந்தலைவர் #காமராஜர் , பேரறிஞர் #அண்ணா , கலைஞர் #கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனத்தை எளிதில் கடந்து சென்று விடுவார்கள்.. அவர்கள் வழிவந்த தளபதி மு.க.ஸ்டாலின் @mkstalin தன்னைப் பார்த்து முட்டாள் முதல்வரே என்று ஒருவர் விமர்சித்த போது முட்டாள் இப்படித்தான் பேசுவான் என்று கடந்து சென்றார்… CM Sir .. நீங்களோ மாண்பு நிறைந்த சட்டப்பேரவையில் உங்கள் அப்பாவை எங்கே காணோம் ? என்று நையாண்டி செய்கிறீர்கள்..

ஐந்து நிமிடம் பேச்சில் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்று கொக்கரிக்கிறீர்கள். ஆதாரம் இன்றி பார்ட்டி பண்ட் என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள்.. #கரூர் பொதுக் கூட்டத்திலே ஓடு ஓடு ஓடு ஓடு என்று அங்க அசைவுடன்  பாட்டு பாடி இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்கள்.. நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் பதில் தந்துள்ளார் #மார்க்கண்டேயன்.

விளாத்திகுளத்தில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது.

 எங்களை சட்டமன்றத்திற்குள்  பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால்  எங்கள் கை பூ பறிக்கவா செய்யும் ? என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார். முட்டாள் முதல்வரே என்று பேசியவர்க்கும், தம்பி குடும்பத்தை வீடு புகுந்து  தாக்கியவருக்கும், லட்சக்கணக்கான ஒரு திரண்ட மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவருக்கும்  அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள்,  உங்கள் கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்கட்சியினருக்கு ஒரு நியாயமா? உதவி கேட்டு வந்த த.வெ.க இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை எம்.எல்.ஏ-வாக உங்கள் கட்சியில் தொடர பெருந்தன்மையுடன் அனுமதித்து உள்ளீர்கள்.

 உங்களோடு இருப்பவர்களின் குற்றங்களை பொறுத்துக்கொள்ள பழகிய உங்களுக்கு எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனது ஏன் ?.தலைவர்களின் படங்களை வெறுமனே  அலங்கரித்தால் மட்டும் போதாது..அவர்களது பண்பும் வரவேண்டும் #CMSir !


 

Related

“முதலமைச்சரை அவதூறாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் : அமைச்சர் நிர்மல் குமார்!”