சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அதிமுக அமைப்புச் செயலாளர் ராயபுரம் ஆர். மனோ அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் ராயபுரம் ஆர். மனோ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1000 பேருக்கு அறுசுவை மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
மேலும், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான பிராட்வே எல். குமாருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியை ராயபுரம் ஆர். மனோ வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.