ஆலந்தூர்: சென்னை மாநகராட்சியில் மக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழ்ங்க அம்மா குடிநீர் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆலந்தூர் 160 வது வட்டத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பழுதடைந்தது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளானார்கள். இதை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திடம் பராமரிப்பு பணி ஒப்படைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் குடிநீர் மையத்தை பராமரிக்கும் பணி தங்களிடம் ஒப்படைக்கப் படவில்லை என்று மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
பராமரிப்பு பணி தங்களிடம் இல்லை என மாநகராட்சி அதிகாரிகளும் மெட்ரோ வாரிய அதிகாரிகளும் மாறி மாறி தெரிவிப்பதால், பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். இந்த மக்களின் கோரிக்கை ஏற்று 160 வது வார்டு கவுன்சிலர் பிருந்தாஶ்ரீ முரளிகிருஷ்ணன் சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். அம்மா குடிநீர் பராமரிப்பு பணியை அரசு முறையாக ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.