சென்னை மாநகராட்சி ஆலந்துார் 12 வதுமண்டல குழு கூட்டம் கிண்டியில உள்ள மண்டல அலுவலகத்தில்  நேற்று நடந்தது இந்த கூட்டத்திற்கு மண்டல குழு  தலைவர் என் சந்திரன் தலைமை வகித்தார்.உதவி கமிஷனர் ரவிராஜன், உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

ஆலந்துார் மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீரில் சிவப்பு நிற புழுக்கள் அதிகம் வருகின்றன. சில இடங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. 

அமுதபிரியா செல்வராஜ் (திமுக): மீனம்பாக்கம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கிறது.

உஷாரணி (அதிமுக): மணப்பாக்கம் பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும். பிரதான சாலையில்போக்குவரத்து காவலரை நிறுத்த வேண்டும்.

பாரதி குமரன்(திமுக): நந்தம்பாக்கத்தில் மயான பூமி சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக தடைபட்டுள்ளது. ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும் குடிநீரில் புழுக்கள் மிதக்கிறது.

சாலமோன் (திமுக): தசரா திருவிழாவை யொட்டி அம்மன் கோயில்களில் தேர்  ஊர்வலம் நடைபெற உள்ளத மரக்கிளைகளை அகற்றி தர வேண்டும் பள்ளமான சாலைகளை சீரமைத்து தர வேண்டும்

பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன்(திமுக ):  ஆலந்தூர் மக்களுக்காக புதியதாக கட்டப்பட்ட முதல்வர் திருமண மண்டபத்தில் ஆலந்தூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

பூங்கொடி ஜெகதீஸ்வரன் (திமுக): ஆதம்பாக்கம் நியூ காலனி சுடுகாட்டில் கொட்டப்பட்ட மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும்.

கவுன்சிலர்களின் கோரிக்கை களுக்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் என். சந்திரன் பேசும்போது:

"குடிநீர் வாரியம் சுகாதாரத்துறை குறித்துதான் புகார்கள் வருகிறது. அதிகாரிகள்  தனி கவனம் செலுத்த வேண்டும். பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து தொங்குகின்றன. உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதியதாக கட்டப்பட்ட ரேஷன்கடை, காரியமண்டபம், செட்டில் கோர்ட் போன்ற கட்டடங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”