செங்கல்பட்டு: மக்கள் இயக்கம்  மூலமாக கிராமங்கள் தோறும் பெண் குழந்தைகளுக்கான கல்வி, விவசாயிகளுக்கான விவசாயம், நிலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் இயக்கம் ஒரு வளர்ச்சியை முன்னெடுத்துள்ளதாகவும் ,இது அரசியலுக்கான தளம் அல்ல எனவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

செங்கல்பட்டு பகுதியில் மக்கள் இயக்கம் சார்பில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் மக்கள் இயக்கத்தின் நிறுவனரான லதா ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் யோகா திருக்குறள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், மாவட்டங்கள் தோறும் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், கிராமங்களில் தங்களுடைய இயக்கம் சார்பில் பெண் குழந்தைகளுக்கான கல்வி விவசாயம் குறித்து விழிப்புணர்வு விவசாய நிலம் குறித்து விழிப்புணர்வு போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தங்களது நோக்கமாகவும் அதனை செயல்படுத்தும் முறையில் மக்கள் இயக்கம் புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த் காந்த் தமிழகம் முழுவதும் 38 மாவட்களில் 6 மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து கிராம்புற பெண்குழந்தைகள் கல்வி ,விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி போன்றவை செயல் படுத்தபோவதாக தெரிவித்தார்.

மக்கள் மேடையின் நோக்கம் பெண்களின் வளர்ச்சிக்காக கைவினை பொருட்கள் பயிற்சி மற்றும் விற்பனை கூடங்களை ஏறப்டுத்த திட்டமிடபட்டு செயல்முறையில் உள்ளதாகவும் கிராம புறங்களில் அதனை விரிவு படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருகிராம புறங்களில் மக்களின் தேவையை எவ்வாறு மக்கள் ஒன்றுகூடி எவ்வாறு பிரச்சனைகளை கையாள வேண்டும் நாட்டுபற்றை கற்று கொடுப்பதே மக்கள் மேடையின் திட்டம் என தெரிவித்தார்.

மக்கள் இயக்கம் கட்சியாக உருவெடுக்குமா என கேள்வியை எழுப்பிய நிலையில் இது அரசியலுக்கான தளம் அல்ல மக்களுக்கும் , பெண்குழந்தைகளுக்கும் விவசாயிகளுக்கும் , கைவினை பொருட்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதே மக்கள் மேடை நோக்கம் என கூறினார்.

முதல்முறையாக மக்கள் மேடையை அறிமுக படுத்தி மக்களின் தேவையை பூர்த்திசெய்வதே எங்களின் நோக்கம் என தெரிவித்தார்.

Related

“எழும்பூரில் தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா”