பெருந்தலைவர் காமராஜரின் 124 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூர் கிழக்கு பகுதி தலைவர் ஏற்பாட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சென்னை, திருவொற்றியூர் தேரடி கோயில் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கு காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தலின்படி வடசென்னை வடகிழக்கு மாவட்டம் தலைவர் ஆலோசனையின் படி  ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் கையெழுத்து இயக்கம் கிழக்கு பகுதி தலைவர் காங்கிரஸ் கமிட்டி கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாதரம்மா கனி முன்னிலையில் காமராஜரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தேசிய மணி மாவட்ட துணை தலைவர் பத்மநாபன், வட்டத் தலைவர் செல்வகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”