கோயம்புத்தூர்: ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் போன் , வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, ஸ்மார்ட் போன் , வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்கள் கவிதை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்களை வழங்கும் இந்தத் திட்டத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி, கோவையில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தங்க நாணயங்களை வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது, ஆடி மாத சிறப்பு சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஸ்மார்ட் போன் , வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் சிறந்த விலையில் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தங்க நாணயத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இந்த முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது, என்றார்.

மேலும், முதல் கட்டமாக கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related

“கோவையில் ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு!”