சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் இந்த கூட்டத்தில் 436 திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் வழிகாட்டுதல்களை தெரிவித்ததாகவும், மேலும் பல்வேறு துறைகளுக்கு துறை சார்ந்த குறிப்பிட்ட அளவில் திட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்களை ஒழிக்கக் கூடிய திட்டங்கள், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்திற்கு 37 திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த 37 திட்டங்களை துறை சார்ந்த அமைச்சர்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுவிலக்கு தீர்வைக்கு 30 திட்டங்கள், வேளாண் துறைக்கு 27 திட்டங்கள், கால்நடை, மீன்வளம் பால்வளத் துறைக்கு 27 திட்டங்கள் என மொத்தம் 436 திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களையும் முதல்வர் வகுத்துள்ளார் என்று நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல மேகதாது அணை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மேகதாது 'அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்' எனவும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.