சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையின்  முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக சட்டப்பேரவை தலைவர் ஜேசிபி பிரபாகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம், 2026-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 18-ஆம் நாள், வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும்.

அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள் என எனத் தெரிவித்தார்.

 புதிய சட்டப்பேரவை செயலாளர் இரா. சாந்தியை அறிமுகம் செய்து வைத்தார். அதிமுகவினர் அளித்துள்ள மனு தொடர்பாக ஆய்வில் உள்ளது. சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதுமாக நேரலை செய்ய இளைஞர்கள் விரும்புகிறார்கள். தக்க தருணங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related

“'436 திட்டங்களுக்கு ஆலோசனை: முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன?: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!”