சென்னை: தாழ்த்தப்பட்ட மக்கள் என குறிப்பிட்டு பேசிய அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றி குறிப்பிட அறிவுறுத்தினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்த மாறி மாறி பட்டியலிட்ட கட்சி உறுப்பினர்கள் விபரம்: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் தலித் ஒருவரை சபாநாயகராக நியமித்தவர் எங்கள் தலைவி புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.

அதற்கு பேசிய சபாநாயகர், ஜாதி மதங்களை கடந்து மக்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். பேரவை தலைவர் அவர்களே, நீங்கள் ஆள் இல்லாததால் இறக்குமதி செய்தீர்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குறுக்கிட,

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களை 8 அமைச்சர்களாக ஆக்கி இருக்கிறார்கள் என்றால் அது வரலாறு என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

வீதிகளில் இருந்த சாதிப் பெயர்களை நீக்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று அவர் தரப்பில் கருத்தை சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலித் சமுதாய சகோதரர்களை தாழ்த்தபட்ட மக்கள் என்று 3 முறை குறிப்பிட்டு உள்ளார். அவ்வாறு அவர்களை குறிப்பிடப்பட தேவை இல்லை. 

அதிமுக காலத்தில் தனபால் அவர்கள் சபாநாயகராக இருந்ததாக குறிப்பிட்டார். அவரது மகன் லோகேஷ் இன்று பத்திர பதிவுத்துறை அமைச்சராக உள்ளார் என்று தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், நானும் தாழ்த்த பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் அப்படி குறிப்பிட்டேன் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார்.

இது தொடர்பாக பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், சட்டப்பேரவையில் முதல்முறையாக பேரவை துணைத் தலைவரை தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை நியமித்தது எங்கள் தலைவர் கலைஞர். அதே தலித் சமுதாயத்தை சேர்ந்த என்னை அரசு கொறடா வாக நியமித்தார். மேலும் உயர்கல்வி துறை அமைச்சராகவும் என்னை செயல்பட வாய்ப்பு தந்தது எங்கள் இயக்கம் என்று தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், 1998 ஆம் ஆண்டிலேயே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக தலித் ஒருவரை நியமித்தது பாமக என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் வன்னியரசு,தாழ்த்தப்பட்ட என்கிற வார்த்தையை பயன்படுத்த கூடாது என ஆதவ் அர்ஜுனா கூறினார்.

நாங்கள் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி போராடும் இயக்கம் .நாங்கள் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம். தலித்கள் இந்தியா முழுவதும் ஒருங்கிணைவதை தடுக்க பட்டியல் இனம் என்கிற வார்த்தையை பாஜக பயன்படுத்துகிறது. தலித் சமுதாயத்தை சேர்ந்த எங்களை அமைச்சராக இந்த அரசில் இடம் பெற்றுள்ளோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.  அதற்கு நன்றி என்று குறிப்பிட்டார்.

Related

“ஆளுநர் உரைக்கும் அட்லிக்கும் என்ன சம்பந்தம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்!”