ஆலந்தூர்:  நங்கநல்லூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி வகுப்பு துவக்க விழா இன்று நங்கநல்லூரில் உள்ள ஜெயகோபால் கரடியா பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. 

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் வே சங்கரநாராயணன் தலைமை வகித்தார். நேரு அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரேமலதா கல்லூரி இணை பேராசிரியர் சே.த. சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறை தலைவர் ப.அனந்தலட்சுமி வரவேற்றார்.

 இந்த விழாவில் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் ஹரிஷ் கலந்துகொண்டு தமிழ் மாணவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்களில் யாருக்காவது போதை பொருள் பழக்கம் இருந்தால் நீங்கள் சொல்லித் திருத்த வேண்டும். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”