ஆலந்தூர்: 

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் மற்றும் குடிநீர் வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் 12 வது மண்டல அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரிஷ் தலைமை தாங்கினார். மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர்கள்

ரவிராஜன், மணிமொழி, குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, மெட்ரோ குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை. பொது விநியோகத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் ஆலந்தூர் தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தடைப்பட்ட பணிகள் குறித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்ப்ட்டது. 

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஹரிஷ் பேசும்போது "பொதுமக்களிடம் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும். மக்கள் குறைகளை நிறைவேற்றித் தர வேண்டும். அதிகாரிகள் பணிகள் தாமதம்  குறித்து ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லாமல் ஒற்றுமையுடன் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

Related

“தன்மீது என்ன பழி சுமத்தினாலும் மக்களுக்கு நல்லதே செய்வேன் : முதல்வர் விஜய் உறுதி!”