ஆலந்தூர்: திமுக தோல்வி விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட திமுக நிர்வாகி குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ரூ.11 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
ஆலந்தூர் தொகுதி 164வது வார்டு செயலாளராக இருந்தவர் ஏசுதாஸ். அவரது மனைவி தேவி ஏசுதாஸ் 164 வார்டு மாமன்ற உறுப்பினராக இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஏசுதாஸ் மன உளைச்சல் காரணமாக கடந்த ஜூன் 22 ந் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நங்கநல்லூர் ஏசுதாஸ் வீட்டில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தேவி ஏசுதாஸ் மற்றும் அவரது மகனிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 11 லட்சம் உதவித்தொகை வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வி.என்.பி. வெங்கட்ராமன், இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் என்.சந்திரன், திமுக பகுதி செயலாளர் பி.குணாளன், இளைஞர்ணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், கவுன்சிலர்கள் துர்காதேவி நடராஜன், பூங்கொடி ஜெகரீஸ்வரன், சாலமோன், ஜெயராம் மார்த்தாண்டன் உள்பட திமுகவினர் இருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.