சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பேட்டியளித்தார்.
அதன் விவரம்: தேர்தல் முடிவுக்குப் பின்பாக ஒவ்வொரு மாவட்ட கழக நிர்வாகிகளை அழைத்து தேர்தல் நடைமுறை பற்றியும், கழகத்தின் வளர்ச்சி பற்றியும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களையும் பொதுச் செயலாளர் கேட்டறிந்தார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒரு பூத்தில் கூட தமிழக வெற்றிக் கழகத்தை விட அதிக வாக்குகள் வாங்காது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதில் அளித்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வரலாறு தெரியுமா? அவர் எந்தெந்த கட்சிகளில் இருந்து வந்துள்ளார் தெரியுமா? சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சியிலிருந்து சாரை சாரையாக யாரும் செல்லவில்லை. பலனடைந்தவர்கள் பலன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பலனடையாமலும், கட்சியின் கொள்கைகளாலும் விடாப்பிடியாக மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டுள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் எடப்பாடியாரின் தலைமையேற்று சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.