நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் தமிழர்களில் 219 பேர் மீட்கப்பட்டு, அவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு வருவார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்றது. அங்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு நேற்று (ஆகஸ்ட் 29) இரவு அமைச்சர்கள் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

அப்போது விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைக்காக டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டோம்.

தற்போது அயலக தமிழர் நலத் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறார். மீட்பு நடவடிக்கை தொடர்பாக சட்டமன்றத்தில் விரிவான அறிக்கையை சமர்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பெருவெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக, இந்தியா - நேபாளம் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் மீட்புப் பணிகள், இந்திய அரசுடன் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை தீவிரப்படுத்தினோம்.

தமிழ்நாட்டில் இருந்து 319 பேர் பல்வேறு குழுக்களாக நேபாளம் சென்றுள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் 31-ஆம் தேதி இரவிற்குள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள்.

மீதமுள்ள 100 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ராணுவங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட 21 பேர் டெல்லி வரவழைக்கப்பட்டனர். அதாவது, கும்பகோணம் ஏஜென்சி மூலம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவில் சென்ற மீதம் 36 பேரை தேடும் பணியின் நடைபெற்று வருகின்றன. ஆத்ம ஞான குழு சார்பாக 150 பேர் சீனா எல்லை வழியாக காத்மாண்டு சென்றுள்ளனர். இவர்கள் பல்வேறு விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இவர்களை தவிர 39 பேர் கொண்ட குழுவும் நேபாளம் சென்றுள்ளது. அவர்களும் பத்திரமாக உள்ளனர். இதில் 31 பேர் வருகிற 31-ஆம் தேதி மாலை கோவைக்கு வருவார்கள். மீதமுள்ள 6 பேர் சென்னைக்கு வருவார்கள்.மகாதேவி யாத்திரா மூலம் நேபாளத்திற்கு சென்ற 49 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தற்போது வரை தகவல் தெரியவில்லை. இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் நடந்த நிலச்சரிவில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், நேபாளத்தில் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக உள்ளது. மத்திய அரசின் வார் ரூம் மூலமாக மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”