காரிமங்கலம் அருகே பிறந்து 21 நாட்களே ஆன ஆண் குழந்தையை தண்ணீர் நிரப்பும் பிளாஸ்டிக் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்துவிட்டு நாடகம் மாடிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி (37), பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், விதுசினி (2) வயது பெண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 23 நாள்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை குழந்தையை வீட்டுக்கு வெளியே வைத்திருந்தபோது, அருகில் இருந்த தண்ணீர் டிரம்முக்குள் எதிா்பாராத விதமாக விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு பைசு அள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் சென்று நடந்த சம்பவ இடத்தை பார்வை இட்டார். மேலும் காரிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் குழந்தையின் தாய் முனியம்மாள் குழந்தையை வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கில் பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டுவிட்டு நாடகம் ஆடியது அம்பலம் ஆகியுள்ளது.
இது குறித்து விசாரணையில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடும்பம் வறுமை நிலையில் இருப்பதாலும் நாகமணி போதுமான வருமானம் இல்லாததாலும், இந்த குழந்தைக்கு எப்படி வளர்ப்பது என்ற நோக்கத்தில் செய்து விட்டதாக காவல் தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய தாயை காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்ற குழந்தையை வறுமையால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.