தூத்துக்குடி: சென்னை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் டிவிசன் கால்பந்து லீக் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்பிரிடட் யூத் கால்பந்து கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்பிரிட் யூத் கால்பந்தாட்ட கழகம் சுமார் 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கால்பந்து கழக அணி பல்வேறு சிறந்த கால்பந்து கழக வீரர்களை உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடத்தப்படும் கால்பந்து லிக் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த ஆண்டு சென்னை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் டிவிஷன் கால்பந்து போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் லீக் சாம்பியனான காயல்பட்டினம் கால்பந்து அணியினரும் அவர்களை எதிர்த்து சென்னை மாவட்டத்தின் கால்பந்து லீக் சாம்பியன் ஆன ஸ்பிரிட்டட் யூத் கால்பந்து அணியினரும் மோதினார்கள்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 5:0 என்ற கோல் கணக்கில் சென்னை ஸ்பிரிட்டட் யூத் கால்பந்து அணியினர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து சாம்பியன் பட்டம் பெற்ற கால்பந்து வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா தூத்துக்குடி இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
இதில் ஸ்பிரிட் யூத் கால்பந்து கழகத் தலைவர் ஜெர்ரி ரோட்டரிக்கோ ஒருங்கிணைப்பாளர் மிரோண்டா வி ராயன் செயலாளர் ரமேஷ் பொருளாளர் செல்வம் மூத்த கால்பந்து பிரின்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்
இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் மற்றும் மூத்த வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் ஏராளமான ஸ்பிரிட் யூத் கால்பந்து கழக நிர்வாகிகள் வீரர்கள் கலந்து கொண்டனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.