ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

இம்​முறை அந்த அணி முழு​மை​யான உடற்​தகு​தியை கொண்ட வீரர்​களை உள்​ளடக்​கிய​தாக உள்​ளது. அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, அன்​ரிச் நோர்க்​கியா வேகப்​பந்து வீச்​சுத்​துறை​யில் பலம் சேர்க்​கக்​கூடும். இளம் வேகப்​பந்து வீச்​சாள​ரான மயங்க் யாத​வும் முழு உடற்தகுதி​யுடன் களமிறங்​கு​கிறார்.

போட்டி முடிவடைந்​ததும் ரவீந்​திர ஜடேஜா கூறிய​தாவது: 12 முதல் 13 ஆண்​டு​கள் விளை​யாடிய சிஎஸ்கே போன்ற ஒரு அணியை விட்டு வெளி​யேறு​வது ஆரம்​பத்​தில் சற்று கடின​மாக இருந்​தது. அது மிக​வும் உணர்ச்​சிகர​மான தருணம். ஆனால் இது போன்ற மாற்​றங்​களும் பயணத்​தின் ஒரு பகு​தி​தான் என்று எனக்கு நானே சொல்​லிக்​கொண்​டேன்.

ஒரு நல்ல விஷ​யம் என்​னவென்​றால், நான் முதன்​முதலில் ஐபிஎல் கோப்​பையை வென்ற அதே அணிக்கு இப்​போது திரும்​பி​யுள்​ளேன். அந்த நினை​வு​கள் எப்​போதும் என்​னுடனேயே இருக்​கும். யு-19 உலகக் கோப்​பைக்​குப் பிறகு, எனது ஐபிஎல் வாழ்க்​கையை ராஜஸ்​தான் அணி​யில்​தான் தொடங்​கினேன், எனது முதல் சீசனிலேயே கோப்​பையை​யும் வென்​றேன். அந்த நினை​வு​களை​யும் நேர்​மறை​யான எண்​ணங்​களை​யும் சுமந்து வந்​துள்​ளேன்.

இந்த புதிய குழு​வுடன் என்​னால் முடிந்​தவரை கற்​றுக்​கொள்​வதும், எனது அனுபவத்தை அணி​யுடன் பகிர்ந்து கொள்​வதுமே எனது லட்​சி​யம். இவ்​வாறு ரவீந்​திர ஜடேஜா கூறி​னார்​.

 

Related

“கோவை காந்திபுரம் நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ச்சுனா ஆய்வு!”