தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென்மண்டல அளவிலான பெண்கள் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி கடந்த மூன்று நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல் ஹாக்கி மைதானமும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஹாக்கி மைதானத்திலும் நடந்து வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த  22 சிபிஎஸ்இ பள்ளி அணிகள் பங்கேற்றன. 14,17மற்றும் 19 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 14வயது பிரிவில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

17வயது பிரிவில் மேட்டுப்பாளையம் எஸ். ஜே.என் பள்ளி அணி முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 19 வயது உட்பட்டோருக்கான போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

Related

“இந்திய விளையாட்டுத் துறைக்கு பிரகாசமான எதிர்காலம் அபினவ் பிந்த்ரா நம்பிக்கை..!”