சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் 60-வது மணிவிழாவையும், 64-வது பிறந்தநாளையும் முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட துணைச் செயலாளர் சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது முறையாக மாநில அளவிலான தடகளப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளரும், எழுச்சித் தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமுமான வீ.சி. கிருபாநிதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், மாவட்ட துணைச் செயலாளர்களான சா. சூர்யா, மு. ஜா. இன்பத்தன் மற்றும் 160-வது வட்டச் செயலாளர் ச. அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பித்தனர்.
எழுச்சித் தமிழரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநில அளவிலான தடகளப் போட்டி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.