தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா மற்றும்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கு.ஜெகதீஸ்வரி  திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா  மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.

அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில்  திருஆடிபூரத்  திருத்தேரோட்டம்  ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவை தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கு.ஜெகதீஸ்வரி  திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது.

ஆடிப்பூரத்  தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மாவட்ட வருவாய் அலுவலர்  ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர்முகமது இர்பான்இணை ஆணையர் செ.மாரியப்பன், தக்கார்/உதவி ஆணையர் மு.நாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர்  சௌ.சக்கரையம்மாள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related

“விமர்சையாக நடைபெற்ற கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் 816 ம் ஆண்டு பாலாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு”