நெல்லை கொக்கிரகுளம் முத்தாரம்மன் திருக்கோவிலில் அம்மன் முன்பு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள குருசாமி சமேத முத்தாரம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு 1008 லட்டு பூஜை நடைபெற்றது ஆடி திருவிழா கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அம்மனுக்கு முளைப்பாரி போட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான லட்டு பூஜை இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது இதற்காக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடந்தது தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும் அதன் பின்னர் அம்மனுக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 1008 லட்டுகள் அம்மன் முன்பு படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து சுவாடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்


வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.