திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோயிலாக விளங்குகின்ற வெயிலுக்கந்த அம்மன் கோயில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை கொடிமரத்தில் காப்பு கட்டிய பொன்ஜெயராமன் வல்லவராயர், திருவிழாக் கொடியினை ஏற்றினார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு அரோகரா வெயிலுகந்த அம்மனுக்கு அரோகரா என்று பக்தி கோசமிட்டனர். அதன்பின்னர் கொடிமரத்திற்கு பால், மஞ்சள், விபூதி, தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்வான நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற.29-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் அருணாசலம், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.

Related

“விமர்சையாக நடைபெற்ற கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் 816 ம் ஆண்டு பாலாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு”