திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடை பிடித்து இழுத்துச் சென்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அரளி மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உப கோவிலான திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்தக் கோவில் ஆவணித் திருவிழா 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் அம்மன் வெவ்வேறு சப்பரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்தத் தேரானது நிலையத்திலிருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து நிலையம் வந்தடைந்தது

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.